Published : 17 Mar 2025 05:45 AM
Last Updated : 17 Mar 2025 05:45 AM
மேஷம்: சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி, காரி யம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
ரிஷபம்: நம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற் றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள்.
கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் ஆதரவாக உடன் நிற்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும்.
சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
துலாம்: தேவையற்ற கவலை, குழப்பம், மன இறுக்கம் வந்து போகும். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதீர்கள். நீண்டதூர பயணங்களை தவிர்க்கவும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கியமுடிகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தனுசு: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிடைக்கும். நல்லவர் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் சேரும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டு.
மகரம்: சோர்வு, களைப்பு நீங்கி, நம்பிக்கை, உற்சாகத் துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும்.
கும்பம்: குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர் களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும்.
மீனம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சு வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT