Published : 12 Mar 2025 05:38 AM
Last Updated : 12 Mar 2025 05:38 AM
மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்துவந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.
கடகம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் நீங்கி அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்: சுபநிகழ்ச்சிகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பனிச்சுமை குறையும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். விஐபிகளை சந்திப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
தனுசு: இழுபறியாக இருந்துவந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
மகரம்: எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. குலதெய்வ பிரார்த்த னைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள், சமூகத்தில் பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT