Published : 10 Mar 2025 05:41 AM
Last Updated : 10 Mar 2025 05:41 AM
மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும்.
ரிஷபம்: மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.
மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும்.
கடகம்: பல காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
சிம்மம்: பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
துலாம்: வெகுநாளாக மனதை வாட்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்: உங்கள் எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் போட்டி விலகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். வியாபாரத்தில் நிதானம் தேவை.
மகரம்: பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்: திடீர் பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வாகன செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் மறையும்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். முகத்தில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT