Published : 04 Mar 2025 05:40 AM
Last Updated : 04 Mar 2025 05:40 AM
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். மகன், மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் நல்ல லாபமுண்டு.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கன்னி: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி இருக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
துலாம்: பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் யோசித்து செயல்படவும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.
விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர்.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு.
மகரம்: வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகமாக உழைப்பீர். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் நல்ல லாபம் தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT