Published : 22 Feb 2025 05:12 AM
Last Updated : 22 Feb 2025 05:12 AM
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: உறவினர் மத்தியில் மதிப்புயரும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: அதிகார பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: பயணங்கள் அலைச்சல் தரும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அதிக வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
தனுசு: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதியுண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதலாக சில பொறுப்புகள் சேரும்.
மகரம்: மனவலிமையுடன் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பாக நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடனை தீர்ப்பீர். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் மேலிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT