Published : 21 Feb 2025 05:12 AM
Last Updated : 21 Feb 2025 05:12 AM
மேஷம்: குடும்பத்தாருடன் வீண் விவாதங்கள், கருத்து மோதல்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
ரிஷபம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்துகளை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.
கடகம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: மனதில் நிம்மதி ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
கன்னி: கடந்தகால நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: சொந்தபந்தங்களிடையே மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். உடன் பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: முன்கோபம், அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
தனுசு: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும். வாகன வசதி பெருகும்.
மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
கும்பம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT