Published : 20 Feb 2025 05:12 AM
Last Updated : 20 Feb 2025 05:12 AM
மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லை வரக் கூடும். உத்தியோகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படவும்.
ரிஷபம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி உண்டு.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே சொத்துகளை விற்பீர். வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண்பழி அகலும்.
கடகம்: சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் வரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்க தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பொறுப்புகள் கூடும்.
துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும் வியாபாரத்தில் போட்டி கூடும். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
தனுசு: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
மகரம்: உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து போவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT