Published : 19 Feb 2025 05:12 AM
Last Updated : 19 Feb 2025 05:12 AM
மேஷம்: டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் கருத்துமோதல் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வாகனத்தை சீர் செய்வீர். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். லாபம் உண்டு.
சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். அலுவலகத்தில் சமயோசிதமாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
துலாம்: வீட்டு பெரியவர்களின் சொல் கேட்டு, முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சி கைகூடி வரும். பழைய வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்ற பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும். லாபமுண்டு.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் விஐபிகளின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிட்டும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: வீண் அலைச்சல் இருக்கும். பணவரவு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT