Published : 18 Feb 2025 05:12 AM
Last Updated : 18 Feb 2025 05:12 AM
மேஷம்: மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.
மிதுனம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். திடீர் பண வரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சியுண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். எதிலும் கவனம் தேவை. உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
மீனம்: அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT