Published : 17 Feb 2025 05:10 AM
Last Updated : 17 Feb 2025 05:10 AM
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். பண பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளை கள் உடல்நலம் சீராகும். வாகன செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் மறையும்.
மிதுனம்: நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
கடகம்: தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணங்கள் திருப்தி தரும். பொருட்கள் சேரும்.
சிம்மம்: உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
கன்னி: மனக் கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளை களின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்: இங்கிதமாக பேசி, வேலையை முடிப்பீர்கள். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் திடீர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும்.
விருச்சிகம்: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தொழில், கடையை விரிவுபடுத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு: வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும், வியாபார ரீதியாக சில மாற்றங்களை செய்வீர்கள்.
கும்பம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசு வேலைகள் முடியும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பணவரவு மன நிறைவை தரும். எதிலும் பொறுமை தேவை.
மீனம்: உடல் சோர்வு, கவலையால் தூக்கம் வராமல் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப் பீர்கள். பயணத்தில் கவனம் தேவை.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT