Published : 15 Feb 2025 05:08 AM
Last Updated : 15 Feb 2025 05:08 AM
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்: கடந்த கால அனுபவம், சாதனைகளை நினைத்து மகிழ்வீர். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர். அலுவலக பணி முடிவுக்கு வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டு.
கடகம்: பணவரவு உண்டு. செலவுகளை குறைத்து இனி சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். உத்தியோக விஷயமாக உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்.
சிம்மம்: தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பொறுப்பு உணர்ந்து செயல்படுவீர்கள். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. அலுவலகத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போக வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். செலவுகளை குறைத்து சேமிக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். ஓரளவு லாபம் உண்டு. அலுவலகரீதியான பயணங்கள் அலைச்சல் தரும்.
விருச்சிகம்: மனைவி, தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். முன்கோபம் தவிர்த்து, பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் நிம்மதி உண்டு. மனைவி வழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: சொந்த ஊரில் கௌரவ பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் சேரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் யார் நல்லவர், யார் அல்லாதோர் என்பதை அறிந்து கொள்வீர்.
மீனம்: தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT