Published : 11 Feb 2025 05:45 AM
Last Updated : 11 Feb 2025 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். பிரபலங்கள் சிலரின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை களின் சாதனைகளால் பெருமை அடைவீர். மனதில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: சில காரியங்களை போராடி முடிப்பீர். பிள்ளை களின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவு படுத்துவீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப் பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் லாபம் தரும். பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

கன்னி: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தடைகள் உடைபடும். ஷேர் மூலமாக பணம் வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.

துலாம்: முடியாது என்றிருந்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. முக்கிய பிரமுகர்களால் பாராட்டப்படுவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் மேன்மையுண்டு. வியாபாரரீதியான பயணம் செல்வீர்.

தனுசு: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரியுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியா பாரரீதியான பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

கும்பம்: நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் ஏற்றம் தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x