Published : 06 Feb 2025 06:04 AM
Last Updated : 06 Feb 2025 06:04 AM
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி, நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் கருத்துமோதல் ஏற்படும். சில வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
சிம்மம்: பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். பல நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். உத்தியோகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஒப்புக் கொண்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்.
தனுசு: மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழில் பங்குதாரர்களுடன் இருந்த மோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவருடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT