Published : 05 Feb 2025 05:45 AM
Last Updated : 05 Feb 2025 05:45 AM
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த பழி அகலும். மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கன்னி: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதரர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மனநிம்மதி ஏற்படும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்டவேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் மாற்றத்தை விரும்புவீர்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT