Published : 03 Feb 2025 05:45 AM
Last Updated : 03 Feb 2025 05:45 AM
மேஷம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகன பழுது நீங்கும்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன் யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன செலவு குறையும்.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் விரும்பி கேட்டதை வாங்கி தருவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் கஷ்டப்பட்டீர்களே, அந்த நிலை மாறி, சேமிப்பு உயரும். தாய் வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
கன்னி: எக்காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சரக்கு கள் தேங்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது அவசியம்.
துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற் றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழி லில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்: உத்தியோகத்தில் தொடர்ந்து வேலைச் சுமை இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வாயு கோளாறால் நெஞ்சுவலி வந்து நீங்கும். உணவில் கட்டுப்பாடு தேவை. பொருள் வரவு உண்டு.
தனுசு: விலகி சென்ற பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். சோர்வு, களைப்பு நீங்கும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவ பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்கு சந்தை வகைகளால் ஆதாயம், லாபம் உண்டு.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். எதிர் பாராத செலவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT