Published : 30 Jan 2025 06:15 AM
Last Updated : 30 Jan 2025 06:15 AM
மேஷம்: உங்கள் புகழ் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
ரிஷபம் : வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம்-பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கடகம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நெருங்கிய உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும். பழைய நண்பர் தேடி வருவார். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
துலாம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும். பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்.
தனுசு: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து போகவும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும்.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போகவும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT