Published : 29 Jan 2025 06:00 AM
Last Updated : 29 Jan 2025 06:00 AM
மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம்: சுபச் செய்திகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி சகல வசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.
மிதுனம்: எதிர்பாராத செலவு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு.
கன்னி: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.
மகரம்: அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யோகா, தியானத்தில் மனதைச் செலுத்துங்கள். பிள்ளை களிடம் கோபத்தை காட்டவேண்டாம்.
கும்பம்: பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன்- மனைவிக்குள் நிலவிய பனிப்போர் மறையும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT