Published : 23 Jan 2025 05:45 AM
Last Updated : 23 Jan 2025 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டி இருக்கும். லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்த பகை நீங்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் பங்குதாரர்களை கேட்டு செயல்படுவீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் மதிப்பு கூடும். பங்குதாரர் களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கடகம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். வியாபார ரீதியான பயணங்கள் வரும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் இருந்து காரியங்களை முடிப்பீர். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். பழைய நல்ல நினைவுகள் மனதை தாலாட்டும். கையில் பணம் புரளும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: உறவினர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். பணவரவு உண்டு. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்பீர். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.

துலாம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து போகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன தடைகள் வரக் கூடும். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பர். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தை இரட்டிப்பாக்குவீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவீர். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புது முயற்சியில் ஆர்வம் காட்டுவீர். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x