Published : 22 Jan 2025 06:00 AM
Last Updated : 22 Jan 2025 06:00 AM
மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்து கொள்ளாதீர்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரரீதியான பயணங்களால் பயனடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர். தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் இடமாற்றம் குறித்த செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
சிம்மம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர். உறவினர் மத்தியில் மதிப்புயரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பாதியில் நின்ற வீட்டு கட்டுமான வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: மறைமுக விமர்சனம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
விருச்சிகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் மன நிம்மதி உண்டு.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமுண்டு.
மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர். பூர்வீக வீட்டு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மீனம்: குழப்பங்கள், முன்கோபத்தால் டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தினர் உங்களை புரிந்துக் கொள்ள வில்லையே என வருந்துவீர். அலுவலகத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT