Published : 21 Jan 2025 05:45 AM
Last Updated : 21 Jan 2025 05:45 AM
மேஷம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குழப்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
ரிஷபம்: சோர்வு நீங்கி, உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
கடகம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
சிம்மம்: பழைய சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள். சொத்து வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கன்னி: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சக ஊழியர் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உற வினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்தமனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். சகோதரர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
மகரம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
கும்பம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம்-பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகம் சிறக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT