Published : 20 Jan 2025 05:45 AM
Last Updated : 20 Jan 2025 05:45 AM
மேஷம்: வெகு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினை களுக்கு முடிவு கட்டுவீர்கள். வாகன செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பிறக்கும்.
ரிஷபம்: எதார்த்தமாக பேசி அனைவரையும் கவருவீர் கள். குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும் பும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும்.
மிதுனம்: உற்சாகம், தோற்றப் பொலிவு, ஆளுமை திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.
சிம்மம்: தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்த கூச்சல், குழப்பம் தீரும். பேச்சில் பொறுமை தேவை.
கன்னி: எடுத்த காரியத்தை முடிப்பதற்குள் அலைச்சல், அசதி அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க நேரிடும். உறவினர்களால் செலவு கூடும். வியாபாரத் தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்: குடும்பத்தில் அமைதி உண்டாகும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டு.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு, வங்கி காரியங் களில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை தீரும்.
தனுசு: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
மகரம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார் கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களை குறை கூறியவர்கள் இனி பாராட்டுவார்கள்.
கும்பம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் நிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மீனம்: தேவையற்ற அச்சம், கவலை, மன குழப்பம் மறையும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப்போய், பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT