Published : 17 Jan 2025 07:58 AM
Last Updated : 17 Jan 2025 07:58 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணப் பற்றாக்குறை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

ரிஷபம்: உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியான பயணத்தால் புத்துணர்ச்சி பெறுவீர்.

கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முடிவுகளை எடுப்பீர். வியாபாரம். உத்தியோகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

சிம்மம்: எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர், அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வரும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர், மேலதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படவும்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். வியாபாரத்தில் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.

மகரம்: உடல் சோர்வு வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவதை தாமதப்படுத்தவும்.

கும்பம்: பிள்ளைகளால் பெருமையடைவீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த பாடுபடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x