Published : 14 Jan 2025 05:10 AM
Last Updated : 14 Jan 2025 05:10 AM
மேஷம்: நீங்கள் எடுக்கும் தைரியமான முடிவுகளை அனைவரும் பாராட்டுவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.
ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு சாதகமாக அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீட்டில் அமைதி தங்கும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
மிதுனம்: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள்.
கடகம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அதிரடியான முடிவுகளை எடுப்பதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பு காட்டுங்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தடைகளை உடைப்பீர்கள். உடல் உபாதை நீங்கும். சகோதர வகையில் பண உதவியுண்டு. வியாபாரத்தில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
கன்னி: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வணங்குவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
துலாம்: பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினருடன் இருந்த கருத்து மோதல் விலகும். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். மேலதிகாரி பெருமையாகப் பேசுவார்.
விருச்சிகம்: பணபலம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொத்து சம்பந்தமாக சிலரை சந்திப்பீர். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் உங்கள் ஆளுமை திறனால் எதிலும் வெற்றி பெறுவீர்.
தனுசு: உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து போகும். குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மகரம்: உறவினர், நண்பர்கள் உங்களை தேடி வருவர். சுபச் செலவுகளால் மனநிம்மதியுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பணியாட்களின் தொல்லை குறையும்.
மீனம்: பால்ய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் பெருகும். வெளியூர் பயணங்களால் வெற்றி உண்டு. வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று தீர்ப்பீர். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT