Published : 13 Jan 2025 06:00 AM
Last Updated : 13 Jan 2025 06:00 AM
மேஷம்: நம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலை களை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
ரிஷபம்: சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.
மிதுனம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் கூடும்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். அலைச்சல், டென்ஷன் குறையும்.
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள் நீங்கும்.
கன்னி: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு.
துலாம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். அமைதி திரும்பும். பெற்றோர் உடல்நலம் சீராகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
விருச்சிகம்: வீண் அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கை, தைரியம் பிறக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு: மனதில் ஒருவித சஞ்சலம் இருக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
மகரம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பல வகையிலும் பண வரவு உண்டு.
மீனம்: பிள்ளைகளால் பெருமை சேரும். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் உண்டாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT