Published : 12 Jan 2025 06:56 AM
Last Updated : 12 Jan 2025 06:56 AM
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் வீண் குழப்பங்கள் விலகும். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக செயல்படுவீர். செலவுகளை கட்டுப்படுத்துவீர். தாயின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரரீதியாக சிலரது அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவது நல்லது. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
துலாம்: விலகி நின்ற உறவினர்கள், நண்பர்கள் இனி விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர். பொறுப்புகள் கூடும்.
விருச்சிகம்: நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். எடுத்த வேலைகள் இழுபறியாகி முடியும். வீணாக கோபப்படாதீர்கள். வியாபாரம், உத்தியோக ரீதியாக எதிர்ப்புகள் இருக்கும்.
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
மகரம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் நண்பர்களாவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நேர்மறையான எண்ணம் தோன்றும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கும்பம்: வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். குழப்பங்கள் விலகும். உடல் நலத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: தம்பதிக்குள் மனம்விட்டு பேசுவீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT