Published : 11 Jan 2025 06:00 AM
Last Updated : 11 Jan 2025 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். வியாபாரரீதியாக புது நபர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

ரிஷபம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். எதிலும் நிதானமாக செயல்படவும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரக் கூடும். வியாபாரத்தில் போராடி பாக்கி வசூலிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

மிதுனம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வீண் குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: பணப் பற்றாக்குறை நீங்கி சேமிப்பு கூடும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி, தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டு.

விருச்சிகம்: அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். திடீர் பயணங்கள், உறக்கமின்மை வந்து செல்லும். உடன்பிறந்தவர்களால் சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபார இடம், அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு.

மகரம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். செலவை குறைத்து சேமிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பிறரைப் பற்றி குறை கூறுவதை அறவே தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x