Published : 13 Dec 2024 05:38 AM
Last Updated : 13 Dec 2024 05:38 AM
மேஷம்: எடுத்த வேலைகள் தடைபட்டு முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி செயல்படவும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
ரிஷபம்: பலமுறை அலைந்து வேலைகளை முடிக்க நெரிடும். தந்தையின் உடல்நிலை சீராகும். குடும்பத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரையும் குறை கூற வேண்டாம்.
மிதுனம்: மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கடகம்: எதிர்மறை எண்ணம் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். திருமண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
கன்னி: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
துலாம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்களுடன் இணக்கமாக செயல் படவும். அலுவலகரீதியான பயணம் மேற்கொள்வீர்.
விருச்சிகம்: கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.
தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்துசேரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் குடும்ப சூழலறிந்து செயல்படுவர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கும்பம்: மறைமுக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மீனம்: பிரபலங்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பங்குதாரர்கள் உங்கள் அறிவுரைகளை ஏற்று செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT