Published : 10 Dec 2024 05:20 AM
Last Updated : 10 Dec 2024 05:20 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் டென்ஷன் விலகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். இல்லத்து பெரியவர்களின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரத்துக்காக சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

துலாம்: செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும். மதிப்பு உயரும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

தனுசு: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும்.

மகரம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவர். நண்பர் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மீனம்: குடும்பத்தில் உங்கள் பேச்சை யாரும்கேட்க வில்லையே என ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x