Published : 25 Oct 2024 05:35 AM
Last Updated : 25 Oct 2024 05:35 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: குற்றம், குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவர். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கடகம்: பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

சிம்மம்: பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில் மேன்மையுண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். பணவரவு உண்டு.

கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

துலாம்: மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும். அலுவலகரீதியான பயணங்கள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். தொழில்ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: குடும்பத்தில் குழப்பங்கள் வரும். பழைய சொத்துப் பிரச்சினைகளை பேச வேண்டாம். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வியாபாரம், உத்தியோகம் தொடர்பாக அவசர முடிவு வேண்டாம்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள்.

கும்பம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த நீண்டநாள் பிரச்சினை விலகும். அரசு காரியம் விரைந்து முடியும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x