Published : 15 Mar 2020 09:23 AM
Last Updated : 15 Mar 2020 09:23 AM
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். வீடு வாங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்: வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமூகமாகும்.
கடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
சிம்மம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும்.
கன்னி: திடீர் திருப்பங்கள் உண்டாகும். விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய பதவியில் இருப்பவரின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.
விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம்.
தனுசு: எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும். தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வராது என்றிருந்த பணம் வரும். சொந்தபந்தங்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கும்பம்: புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். திடீர் பயணம் உண்டு.
மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT