Published : 01 Mar 2020 10:35 AM
Last Updated : 01 Mar 2020 10:35 AM
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
மிதுனம்: காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.
கடகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் நிலவிய மனக்கசப்பு நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதையும் உற்சாகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
துலாம்: வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
தனுசு: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
மீனம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT