Published : 29 Feb 2020 07:54 AM
Last Updated : 29 Feb 2020 07:54 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற குழப்பம் ஏற்படும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய கருத்துகள்கூட சீரியசாக வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண முயல்வீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.
சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள்.. பணிகள் விரைந்து முடியும். வாகனத்தை சீர்செய்வீர்கள். பணம் வரவு உண்டு.
கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம்நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். திடீர் பயணம் உண்டு.
துலாம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். நவீன ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
தனுசு: மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.
மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். ஆன்மிக பயணம் ஏற்படும்.
மீனம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் நிலவிய சுணக்கம் நீங்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT