Published : 28 Feb 2020 10:04 AM
Last Updated : 28 Feb 2020 10:04 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. முன்கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படுங்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.

மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

சிம்மம்: அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள். ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள்.

துலாம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன செலவுகள் நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

தனுசு: சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x