Published : 14 Feb 2020 09:28 AM
Last Updated : 14 Feb 2020 09:28 AM
மேஷம்: உங்களின் திறமைகள் பளிச்சிடும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
மிதுனம்: குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.
கடகம்: நண்பர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
சிம்மம்: கம்பீரமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
துலாம்: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.
விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கும்பம்: நீண்டநாட்களுக்குப் பின் சொந்தபந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு விலகும்.
மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT