Published : 12 Feb 2020 09:47 AM
Last Updated : 12 Feb 2020 09:47 AM
மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.
மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். சிலர் உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். உறவினர்கள், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, மனச்சோர்வு உண்டாகக் கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் உதவியால் சில காரியங்கள் நிறைவேறும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விஐபிகளுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மகரம்: பிரச்சினைகளுக்கான காரணத்தை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க முயலுங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். வெளியூர் பயணம் உண்டு.
மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT