Published : 11 Feb 2020 08:43 AM
Last Updated : 11 Feb 2020 08:43 AM
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். மகளுக்கு தாமதமாகிக் கொண்டிருந்த திருமண பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு வரும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.
கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகள் நம்பிக்கை தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகளை தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி: சுபச்செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவியுண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் அடிக்கடி பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT