Published : 09 Feb 2020 09:25 AM
Last Updated : 09 Feb 2020 09:25 AM
மேஷம் : வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
ரிஷபம் : நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்கு சாதகமாகும். மனைவி வழி உறவினர்களுடன் நிலவிய ஈகோ பிரச்சினை நீங்கும்.
மிதுனம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.
கடகம் : உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவஸ்தைகள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம் : அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
கன்னி : எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தடைகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம் : எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம் : சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள்.
தனுசு : அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலை முயற்சிகள் தாமதமாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.
மகரம் : உங்கள் செயல்களில் சாதுர்யம் வெளிப்படும். கனிவாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரமும் உயரும். பணவரவு உண்டு.
கும்பம் : சமயோசிதமாகப் பேசி சிக்கலான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடன்களை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயம் இனிதே நிறைவேறும்.
மீனம் : கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்பு, பதவி கிடைக்கக் கூடும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT