Published : 24 Jan 2020 09:40 AM
Last Updated : 24 Jan 2020 09:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் முடித்து காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து உண்டாகும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: மனதில் குதூகலம் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக மனதை வருத்தி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

மகரம்: பல வேலைகளை இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும்முன் எரிபொருள் உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x