Published : 11 Jan 2020 09:19 AM
Last Updated : 11 Jan 2020 09:19 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரி தக்க சமயத்தில் உதவுவார். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: முன்கோபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் கைவிட்டுப்போன நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களெல்லாம் இப்போது நினைவுக்கு வரும்.

சிம்மம்: பால்ய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமண விஷயத்தில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புதுவழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ யாருக்கும் தர வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள்.

மகரம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகவும், பக்குவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடிப்பீர்கள்.

கும்பம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது.

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்து ஆலோசனை கேட்பீர்கள். பணவரவு உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x