Published : 09 Jan 2020 09:10 AM
Last Updated : 09 Jan 2020 09:10 AM
மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.
மிதுனம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினை வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். பணவரவு உண்டு.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும்
விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தாமதமாகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை உண்டு.
தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பு மூலம் வெற்றிகளை குவிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT