Published : 06 Jan 2020 09:47 AM
Last Updated : 06 Jan 2020 09:47 AM
மேஷம்
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தடைகள், இடையூறுகள் வந்தாலும் தாண்டி முன்னேறுவீர்கள்.
ரிஷபம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். எதிலும் நிதானம் தேவை.
மிதுனம்
கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பால் ஆதாயம் உண்டு.
கடகம்
சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் கூடிவரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.
சிம்மம்
தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி
தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி நடந்துகொள்ள வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் மாலையில் கிடைக்கும்.
துலாம்
உங்களிடம் மறைந்து கிடக்கும் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களை சிறப்பாக முடித்து பாராட்டப்படுவீர்கள்.
தனுசு
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து, உற்சாகப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சகோதர உறவுகளால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
மகரம்
அவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் சேரும்.
கும்பம்
திட்டவட்டமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியாக உள்ள சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
மீனம்
புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து உறவாடுவார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT