Published : 02 Jan 2020 09:50 AM
Last Updated : 02 Jan 2020 09:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீண் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: இழுபறியாக இருந்துவந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வந்து நீங்கும்.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். புண்ணிய தலம் செல்வீர்கள்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். மனதில் நிலவிய வீண் குழப்பங்கள், பய உணர்வு நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவு எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x