Published : 22 Dec 2019 09:48 AM
Last Updated : 22 Dec 2019 09:48 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதரர் வகையில் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களது பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பணவரவு உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு அவதிப்படாதீர்கள். உறவினர், நண்பர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x