Published : 18 Dec 2019 08:27 AM
Last Updated : 18 Dec 2019 08:27 AM
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். இழுபறியாக இருந்துவந்த மகளின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் வெற்றியுண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.
கடகம்: எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண பேச்சுவார்த்தை வெற்றி தரும்.
சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாக் கூடும். புதிய வாய்ப்புகள் குறித்து பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நீங்கள், நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலத்துக்கென புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய சிநேகிதர்கள் சந்திப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு ஏற்படக்கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கும்பம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT