Published : 13 Dec 2019 08:30 AM
Last Updated : 13 Dec 2019 08:30 AM

இந்த நாள் உங்கள் எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துமோதல்கள் நீங்கி சுமுக நிலை உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத மனத்தாங்கல் வரும். சாலையைக் கடக்கும்போதும், வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும்.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு, அந்தஸ்து கூடும்.

துலாம்: தந்தைவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கெல்லாம் தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.

தனுசு: வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றி தரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். விலகியிருந்த நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். எதிர்காலத்தை குறித்த உங்களின் கணிப்பு ஓரளவு சரியாக இருக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x