Published : 28 Nov 2019 10:37 AM
Last Updated : 28 Nov 2019 10:37 AM
மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
கடகம்: சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். நல்ல நிறுவனத்தில் புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய விவகாரங்களில் திடமான முடிவு எடுப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள்.
மகரம்: குடும்பத்தில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.
கும்பம்: சாதிக்க வேண்டும் என்கிற வைராக்யம் பிறக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
மீனம்: நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் அமையும். திடீர் பயணம் உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT