Published : 22 Nov 2019 10:01 AM
Last Updated : 22 Nov 2019 10:01 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.

மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டு.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் பிரபலமானவருடன் நட்பு கிடைக்கும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விஐபியுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளுக்கான ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x