Published : 21 Nov 2019 09:36 AM
Last Updated : 21 Nov 2019 09:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நீண்ட இழுபறியாக இருந்த மகளின் திருமண பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் நிலவி வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடங்கலின்றி நிறைவேறும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழி சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுங்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கன்னி: வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். பணவரவு உண்டு.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் உதவியுண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடிவரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மகரம்: வீண் விரயம், பிள்ளைகளால் பொருட்செலவு ஏற்படும். வாகனம் பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். பணவரவு திருப்தி தரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x