Published : 20 Nov 2019 08:55 AM
Last Updated : 20 Nov 2019 08:55 AM
மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
ரிஷபம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்க காரியங்களில் இருந்துவந்த பின்னடைவு நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எடுத்த காரியங்களை முடித்து காட்டுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்: சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
கன்னி: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். மருத்துவச் செலவு ஏற்படும்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும்.
விருச்சிகம்: அடிமனதில் நிலவிய பயம் விலகும். துணிச்சலுடன் முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை.
கும்பம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
மீனம்: முகப்பொலிவு கூடும். துரிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT