Published : 08 Nov 2019 08:59 AM
Last Updated : 08 Nov 2019 08:59 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பல வேலைகள் இழுபறிக்குப் பின்னரே முடியும். பிள்ளை களிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியங்கள் தடங்கல் இன்றி முடியும்.

சிம்மம்: முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கப் பாருங்கள். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியாகும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

தனுசு: பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். தாய்வழி உறவுகளுடன் கருத்துமோதல் வரக்கூடும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகனம் வாங்குவீர்கள். சொத்து வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: குடும்பத்தில் சாதாரண பேச்சுகள்கூட சச்சரவை ஏற்படுத்தலாம். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x